×

ரிவால்வர் ரீட்டாவை முடித்தார் கீர்த்தி சுரேஷ்

சென்னை: மாமன்னன்,சாணிக் காயிதம், தசரா, சைரன் என தொடர்ந்து தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் ஹீரோயின் சப்ஜெக்ட்களில் தற்போது கவனம் செலுத்துகிறார். ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா ஆகிய படங்களில் கீர்த்தியின் கேரக்டருக்குதான் முக்கியத்துவம் தரப்பட்டு உருவாகிறது. அதிலும் ரிவால்வர் ரீட்டா படத்தில் முதல் முறையாக ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். புதுமுகம் சந்துரு இயக்கும் இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி கடைசி நாள் நடந்த படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சில மாதங்களுக்கு முன் சமந்தா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

The post ரிவால்வர் ரீட்டாவை முடித்தார் கீர்த்தி சுரேஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rita ,Keerthy Suresh ,Chennai ,Mamannan ,Sanik Kaitham ,Dussehra ,Siren ,Revolver Rita ,Raghu Datta… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தலைமை செயலகம் டிரெய்லர்.!